இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு! முன்னதாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ரணில் விக்ரமசிங்கே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.
மக்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே மறுத்துவிட்டதால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மக்கள் நலன் கருதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/WeAreProtestors/status/1545801324419510273
https://twitter.com/TridentAnalysis/status/1545810693726691328
Tags: வைரல் வீடியோ