ராட்ஷச கடல் அலையில் சிக்கிய 8 பேர்.. 3 பேர் மீட்பு ..திக்திக் நேரடி வீடியோ
ஓமான் நாட்டில் உள்ள தோஃபர் கவர்னரேட்டில் உள்ள அல்-முக்சைல் கடற்கரையில் கடந்த 10 ம்தேதி பக்ரீத் அன்று ஓர் இஸ்லாமிய குடும்பம் கடற்கரை பாதுகப்பு தடையை தாண்டி சென்று கடல் அலையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்கள்
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் ராட்ஷச கடல் அலையில் சிக்கிகொண்டார்கள் அதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் கடல் அலைகளின் சக்தியால் அடித்துச் செல்லப்பட்டார்கள் அவர்களில் மூவரை மட்டுமே மீட்க முடிந்தது என்றும் ஐவரைத் தேடி வருவதாகவும் சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (சிடிஏஏ) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது குடும்பம் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட தருணத்தைக் காட்டுகிறது.அல் முக்சைல் பகுதியில் உள்ள மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து ஆசிய குடும்ப உறுப்பினர்களையும் தேடி வருவதாக ஓமானிய அரச பொலிஸார் தெரிவித்தனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/WeatherOman/status/1546369426076868608
https://twitter.com/RoyalOmanPolice/status/1546102200329437185
https://www.gulftoday.ae/news/2022/07/10/family-of-8-goes-missing-in-oman-sea-3-rescued
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ