Breaking News

பொய் செய்திகள் பரப்பிய 737 இணையதளங்கள் , 94 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு

அட்மின் மீடியா
0

பொய் செய்திகள் பரப்பிய 737 இணையதளங்கள் , 94 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு



இணையதளம், சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். 

அதில், இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.2021-2022 காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 யுஆர்எல்-கள் முடக்கப்பட்டுள்ளன. 

பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் 2020ம் ஆண்டு மார்ச் 31 அன்று உருவாக்கப்பட்டது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அச்சு ஊடகத்திற்காக,பிரஸ் கவுன்சில் சட்டம், 1978ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. PCI "பத்திரிகை நடத்தை விதிமுறைகளை" உருவாக்கியுள்ளது.இந்த விதிமுறைகளில் அச்சு பொய்/பொய்யான செய்திகளை வெளியிடுதல்/ பரப்புதல் போன்றவற்றை தவிர்ப்பதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback