பொள்ளாட்சி ஜெயராமன் உட்பட மேலும் 44 பேர் கட்சியில் இருந்து நீக்கிய ஒ.பன்னீர் செல்வம் முழு விவரம்..
ஓ.பன்னீர்செல்வம் நேற்று எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மேலும் 44 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இன்று சி.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி , மாதவரம் மூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா, பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வம் என குறிப்பிட்டு வெளியாகி உள்ள அறிக்கையில் , கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு , மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் , கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 44 பேரை குறிப்பிட்டு கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் என ஓபிஎஸ் அறிக்கை
https://www.adminmedia.in/2022/07/22.html
Tags: அரசியல் செய்திகள்