Breaking News

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்வது எப்படி.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.

 


இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் பிளஸ்2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் ஜூலை14ம் தேதி நாளை வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தேர்வுஅரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட வேண்டும். இதனை பதிவு செய்த பிறகு விடைத்தாள் நகல் திரையில் தோன்றும்.இந்த விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள், வேறுபாடு இருப்பின் மறுகூட்டலுக்கு நாளை மறுநாள் ஜூலை 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை ஜூலை 19ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback