பெண்களின் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண் 181 விழிப்புணர்வு வீடியோ
அட்மின் மீடியா
0
பெண்களின் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண் 181 விழிப்புணர்வு வீடியோ
181 என்பது மகளிருக்கான உதவி எண் ஆகும் மேலும் இது முற்றிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்.
இந்த சேவை நாட்டில் முதன்முதலில் தலைநகர் டெல்லியில் தான் தொடங்கப்பட்டது.அதன்பின் நாட்டில் பல மாநிலங்களில் இந்த சேவை நடைமுறையில் உள்ளது மேலும் தமிழகத்தில் கடந்த 2018 டிசம்பர் 10 முதல் இச்சேவை செயல்படுகிறது.
இந்த உதவி எண் மூலம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
குடும்ப வன்முறை,
வரதட்சிணை கொடுமை
பாலியல் தொல்லை,
உடல்,மனநல பாதிப்பு, போன்ற உதவிகளை பெறலாம்.
181' மையத்துடன் தமிழகத்தின் அனைத்து காவல் நிலைய விவரங்கள்,தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தப்பகுதியில் உதவி தேவைப்பட்டாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை எளிதில் தொடர்பு கொண்டு உடனடியாக உதவியை பெற முடியும்.
181 கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஒருவர் அழைக்கும் போது அந்த நபரின் புகார் தன்மை முதலில் அதன் வீரியத்தின் அடிப்படையில் தீவிரமான, தீவிரத்தன்மை குறைவான என்றளவில் பிரிக்கப்பட்டு உடனடியாக அவர்களின் கோரிக்கைக்கு நிவாரணம் அளிக்கப்படுகின்றது
181 எண்ணை அழைத்துப் புகார் சொல்ல இயலாத நேரத்தில் https://tn181whl.org/tamil/ என்ற இணையதளத்திற்குச் சென்றும் புகார் அளிக்கலாம்
வீடியோ பார்க்க:
Tags: முக்கிய செய்தி