நிறுத்தி வைக்கபட்ட இருசக்கரவாகனத்தையும் சேர்த்து புதிதாக போடபட்ட சிமெண்ட் சாலை -வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டியாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அதில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. மேலும் அவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்தது அதனை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ