Breaking News

விமானப் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்.. புதிய உத்தரவு

அட்மின் மீடியா
0

விமானப்பயணிகள் மாஸ்க் அணியாவிட்டாலோ, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலோ விமானத்தில் செல்ல தடை என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.



குறிப்பாக விமானத்தில் பயணிக்கும் போது மாஸ் அணியாமல் இருக்கும் பயணிகளை கண்டறிந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான அறிவிப்புகளை வெளியிட்டுவதின் மூலம் கொரோனா தொற்றில் இருந்து சற்று பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் முகக்கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் இறந்து இறக்கிவிடலாம் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:

விமானத்தில் பயணிப்பவா்கள் சரியாக முகக் கவசம் அணிந்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

பயணிகள் கூடுதலாக முகக்கவசம் கேட்டால் விமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணியை விமானம் புறப்படும் முன்பே விமான நிறுவனங்கள் இறக்கிவிடலாம். 

நடுவானில் பறக்கும்போது கொரோனா விதிகளை மீறி யாராவது முகக் கவசம் அணிய மறுத்தால், அவரை ஒழுங்கீனமான பயணிகள் பட்டியலில் சோ்க்கலாம். 

விமானத்தில் பயணிப்பவா்கள், அவா்களை வரவேற்கவும் வழியனுப்பவும் வருபவா்கள், விமானிகள், விமானப் பணிப்பெண்கள், பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில சட்டத்தின்படி அபராதம் விதிக்கலாம். தேவைப்பட்டால், அவா்களை பாதுகாப்புப் படையினரிடமும் ஒப்படைக்கலாம், என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback