குரங்கு அம்மை எதிரொலி- விமான பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் உள்ளது இந்நிலையில் தற்போது குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்புகள் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா,பிரிட்டன்,கனடா நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என சர்வதேச விமான நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கண்டிப்பாக 21 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து
அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை
இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்