பீகாரில் போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிய பள்ளி வாகனம் கதறி அழும் சிறுவன் - வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாலை பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு திரும்பிய வேன் ஒன்று போராட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டது. வேனில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியையும் பதற்றமடைந்தனர்.
அந்த வாகனத்தில் இருந்த ஒரு சிறுவன் போராட்டக்காரர்களின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்து அழுதுள்ளான். பின்னர் காவல்துறையின் உதவியுடன் அந்தப் பள்ளி வாகனம் மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/AdvGautamsingh/status/1537729694128291840
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ