பீகாரில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தீ வைத்த போரட்டகாரர்கள் வீடியோ
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் நேற்று மூன்றாவது நாளாகப் போராட்டம் நடந்தது
அப்போது துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர்.
மேலும் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாளந்தாவில் உள்ள இஸ்லாம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இஸ்லாம்பூர்-ஹதியா விரைவு ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் மூன்று ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பல பெட்டிகள் சேதமடைந்தன. லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. மேலும் சசரத்தில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தீ வைத்ததில் முற்றிலும் எரிந்தது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ihappydhaliwal/status/1537694553041682432
Tags: இந்திய செய்திகள்