புதிய அம்சத்துடன் டெலிகிராம் பிரீமியம்...இனி கட்டணம் செலுத்த வேண்டும்..
தற்போது டெலகிராம் நிறுவனம் புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. புதிய பிரீமியம் சேவை அறிமுகமானால் பயனர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது
டெலிகிராம் செயலியில் தற்போது அனைத்து வசதிகளும் பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை கொண்டுவர உள்ளது
மேலும் இந்த பிரீமியம் அம்சம் ஜூன் கடைசி வாரம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டெலிகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கான சேவை அப்படியே தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்