Breaking News

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் - ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ அல்லது சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகின்றது

பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்படுகின்றது

எனவே அனைத்து ஓட்டுநர் நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback