உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை வீடியோ
அமெரிக்காவில் உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர் என்பவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவை 2012ம் ஆண்டு இந்த மிளகாயை சவுத் கரோலினா பல்கலைகழகத்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது இதன் காரத்தன்மையை ஆய்வு செய்ய ஸ்கோவைல் ஹீட் யூனிட் என்ற அளவு கோலை எடுத்துக்கொண்டனர் இந்த மிளகாய் 15,59,300 ஸ்கோவைல் ஹீட் யூனிட் காரத்தை பதிவு செய்தது.சாதாரண மிளகாயை ஆய்வு செய்யும் போது அதன் ஸ்கோவைல் ஹீட் யூனிட் 5000 வரைதான் இருந்தது.
கின்னஸ் சாதனை வீடியோ பார்க்க:-
Tags: முக்கிய செய்தி