இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வேலூர்,
ராணிப்பேட்டை,
திருப்பத்தூர்,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
சேலம்,
தருமபுரி,
கிருஷ்ணகிரி
ஆகிய 8 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்