Breaking News

உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது 50-ல் இருந்து 40-ஆக குறைப்பு - அரசானை வெளியீடு

அட்மின் மீடியா
0
மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைப்பு தமிழக அரசு

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் 2022-23 ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம்  பெறுவதற்கான வயது 50லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50ல் இருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback