Breaking News

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணி அக்னி பாத் திட்டம் அறிமுகம்:- சேர்வது எப்படி? தகுதி என்ன? முழு விபரம்

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 வருட ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தில் பணியில் சேர முடியும்.ராணுவ செலவுகளைக் குறைக்கும் வகையில் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கும் அக்னிபாத் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 


அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். மத்திய அமைச்சரவை இந்த புதிய பணி நியமன முறைக்கு இன்று ஒப்புதல் அளித்தது. 

அக்னிவீரர்கள் முழு விவரம்:-

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம்விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும்17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

பென்சன் இல்லை

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback