Breaking News

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காலிபணியிடங்கள் விண்ணப்பிக்க....முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்ததுறை , தீயனைப்பு துறை ஆகிய  இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 30-ம் தேதி (இன்று) வெளியிடப்பட்டுள்ளது



பணி:-

காவல்துறை, 

சிறை மற்றும் சீர்திருத்ததுறை , 

தீயனைப்பு துறை

 

கல்விதகுதி:-

10 ம் வகுப்பு தேர்ச்சி

 

வயது வரம்பு:-

ஜூலை 1ம் தேதி அன்று, அனைத்து விண்ணப்பதாரர்களும், குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் எனில் அதிகபட்சம் 28 வயதிற்கு மேற்படாதவராகவும், 

எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் எனில் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் 31 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 

ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 37 வயதிற்கு மேற்படாதவராகவும், 

முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 47 வயதிற்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க:-

https://www.tnusrb.tn.gov.in/


தேர்வுக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.250/- தேர்வுக் கட்டணத்தை இணையவழியிலோ, இணையமில்லா வழியில் எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம்.


கடைசி நாள்:-

15.08.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf

இத் தேர்வுக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை மாதம் 7-ஆம் தேதி முதல், வாரத்தின் 7 நாள்களும் செயல்படும்.

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 ஆகிய தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback