Breaking News

அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!

அட்மின் மீடியா
0

அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!


மத்திய அரசு அறிமுகப்படுத்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback