முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டார்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை செல்ல இருந்த நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலை கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.
இதே போல் இன்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் அதனால் இன்றும் நாளையும் 21-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்