வாட்ஸப் பே மூலம் ரூ1 அனுப்பினால் ரூ 105 கேஷ்பேக்!! வாட்ஸ் அப் அதிரடி அறிவிப்பு!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல அதிரடி அப்டேட்களையும்,அறிவிப்புக்களையும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை வாடிக்கையாளர்களிடையே பிரபலபடுத்த அதிரடி கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் 3 பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.105 வரை கேஷ்பேக் பெறும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் யுபிஐ கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி:-
இந்த சலுகை உங்களுக்கு கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முதலில் புது வெர்ஷன் வாட்ஸ்அப் செயலி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
அதன்பின், அதில் பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிஃப்ட் ஐகான் இருந்தால் நீங்கள் தகுதி பெற்றவர்கள்.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.
நீங்கள் பணம் அனுப்பும் நபர்கள் அவர்களது வங்கிக் கணக்கை வாட்ஸ் அப்பில் இணைத்து இருக்க வேண்டும்.
மூன்று பரிவர்த்தனைக்கும் தலா ரூ. 35 வீதம் மொத்தம் உங்களுக்கு ரூ.105 கிடைக்கும்.
வாட்ஸப்பில் பணம் அனுப்புவது எப்படி:-
Tags: தொழில்நுட்பம்