Breaking News

இலங்கையில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு

அட்மின் மீடியா
0

அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படைக்கும் அனுமதி அளித்துள்ளது - இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

 


இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சக குடிமக்களை தாக்குவோரையும் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இரு நாட்களாக வன்முறை வெடித்தநிலையில், முப்படைகளுக்கு சுட்டுத்தள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளுங்கட்சிக்கு சொந்தமான வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தீவைக்கப்பட்டது. 

இதனால் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து ராஜினாமா செய்து, கொழும்பு அரசு மாளிகையை விட்டு வெளியேறினார்

இந்நிலையில் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுட ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback