சட்டிஸ்கரில் திருடனை மரத்தில் தலைகீழாக கட்டி அடித்த கொடூரம்....வீடியோ
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை, கும்பல் ஒன்று மரத்தில் தொங்கவிட்டு தலைகீழாக அடிக்கும் வீடியோ ஒன்ற வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்
சட்டிஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த மகாவீர் என்பவர் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.சில தினங்களுக்கு முன்பாக மனிஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருடும் போது மாட்டி தப்பி சென்றுள்ளார் அப்போது அவரது பைக்கை விட்டு சென்றுள்ளார்
அடுத்த நாள் மீண்டும் அதே வீட்டிற்கு வந்து வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுக்க வந்தபோது அவரை பிடித்து மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ