Breaking News

தோல்வியே கண்டிராத குத்துச்சண்டை வீரர் போட்டியின்போது திடீர் மரணம் வீடியோ

அட்மின் மீடியா
0

பிரபல ஜெர்மன் குத்துச்சண்டை வீரர் மூசா யமக் வயது 38 உகாண்டா வீரர் ஹம்சா வண்டேராவை எதிர்கொண்டபோது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு போட்டி நடைபெறும் இடத்திலேயே சுருண்டு விழுந்தார் பின்னர் அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணம் விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.


இன்றைய போட்டியில்  உகாண்டா வீரர் ஹம்சா வண்டேராவை எதிர்கொண்டார் போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது இந்தப் போட்டியின் மூன்றாவது சுற்று தொடங்குவதற்கு முன்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.இதையடுத்து அங்கே மருத்துவ குழு வந்து பார்த்தபோது அவருக்கு மாரடைப்பு என தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார்.

குத்துச்சண்டை வீரரான மூசா யமக் இதுவரையில் விளையாடிய 75 தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியைத் தழுவியது இல்லை என கூறப்படுகின்றது. 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/DaveskiDave1/status/1526846952331149312

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback