கொரோனா ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து - டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து - டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஊரடங்கு காலத்தில் வதந்தி பரப்பியவர்கள், காவல்துறையினரை தங்கள் பணி செய்ய விடாமல் தடுத்தல், வாகன சோதனையில் போலீசாரை மிரட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது , முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது, தொடர்பான வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கைவிடப்படும்' என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கும் தற்போது டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் அதில்
2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் திரும்பப்பெற டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்