வங்கக்கடலில் உருவாகும் புயல் அசானி என பெயர் வைப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கோப்பு படம்இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ வைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரைகடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்