பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்