Breaking News

நிலாவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் செடி முளைத்தது: நாசா விஞ்ஞானிகள் சாதனை

அட்மின் மீடியா
0
அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக, நிலவில் இருந்து கொண்டு வந்த மண்ணில் செடிகளை வளர்த்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 



நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஒரு பக்கம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் தனது 11, 12 மற்றும் 17வது விண்வெளி பயணத்தின் போது, நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்க்க அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். 

ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள மண் மட்டுமே ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது அதனுடன் நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து, தூய்மையான அறையில் சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் சூரிய ஒளி, காற்று கிடைக்கும் வகையில் வைத்தனர் நிலவு மண் ஊட்டச்சத்து குறைவானது என்பதால், தினசரி ஊட்டச்சத்து கரைசல் ஊற்றப்பட்டது. 

சில நாட்களில் விதைகள் அனைத்தும் முளைத்து இருந்தன. இதன் மூலம், நிலவு மண்ணில் செடி முளைக்கும் என்பதை உறுதியாகி இருக்கிறது. இந்த ஆராய்ச்சி நாசாவின் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback