Breaking News

விமானங்களில் ஜம்ஜம் தண்ணீரை எடுத்துச் செல்ல சவுதி அரேபியா தடை விதித்ததா? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் இருந்து உம்ரா மற்றும் ஹஜ் செய்து கிளம்பும் பயணிகள் தங்களுடைய உடைமை உள்ளே செக் இன் பேக்கேஜ்களில் ஜம் ஜம் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்வது இன்றைய தேதியில் (17/05/2022) இருந்து தடை செய்யப்படுகிறது.  ஜம்ஜம் தண்ணீர்  செக் இன் பேக்கேஜ்களில் மறைத்து எடுத்துச் செல்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரசு ஆணை பிறப்பித்துள்ளது



ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களை செக்-இன் சாமான்களை தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்தும் புதிய வழிகாட்டுதல்களை சவுதி பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களும் இஸ்லாமிய ஹஜ் யாத்திரைக்கான  இந்த புதிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

மேலும்  ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயணிகள் ஐந்து லிட்டர் ஜம்ஜம் தண்ணீரை தனியாக உங்கள் லக்கேஜுடன் எடுத்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது நீங்கள் தெரிந்து கொள்ள ஜம்ஜாம் தண்ணீர் விமான நிலையத்தில் உள்ள ரேப்பிங் நிறுவனத்தால் நன்றாக பேக்கிங்செய்து இருக்க வேண்டும்எனவும் தெரிவித்துள்ளது

Tags: FACT CHECK மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback