Breaking News

சேலத்தில் தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

 
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திருச்செங்கோட்டிலிருந்து எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக தனியார் பேருந்து புளியமரத்தில் மோதி நின்றது. 

ிபத்து நடந்த இந்த காட்சிகள் தனியார் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுனர் அருணாசலம் பேருந்து எஞ்சின் மேல் தூக்கி வீசப்பட்டார். அவர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1526796340092555264

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback