Breaking News

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்ககூடாது-தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது

 

இந்நிலையில்,

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது மேலும் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும்,கட்டணத்தில் மீதி தொகை செலுத்தாதவர்களுக்கும் பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பொதுத்தேர்வில் எந்த ஒரு மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால்,சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் மற்றும் அப்பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback