Breaking News

ஷவர்மா கடைகளை மூட கேரள அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

கேரளாவில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

 

கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 30 பேர் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என கேரளாவை சேர்ந்த  ஆன்மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது  

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  

கெட்டுப்போன சிக்கன் சவர்மா கொடுக்கப்பட்டதால்தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து,உணவகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback