பெண்கள் குழந்தைகள், பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்தில் சிசிடி கேமரா, அவசர பட்டன் அறிமுகம்
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு பேருந்துகளில் சிசிடிவி கேமரா,அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப் பட்டுள்ளன.
அரசுப் பேருந்துகளில் 3 சிசிடிவி கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும்போது, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், குற்றச்செயல்களை குறைப்பதற்கும் முடியும் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளில் புதிய வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
Tags: தமிழக செய்திகள்