Breaking News

உணவு தொடர்பாக புகார்களின் மீது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அட்மின் மீடியா
0
பொதுமக்களிடமிருந்து உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

 


 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுவதை உறுதி செய்யவேண்டும். 

ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

அனைத்து வகை இறைச்சி, மீன், முட்டை, பால்பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக,அனைத்து நியமன அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 

எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் குறித்து புகார் அளித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback