கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது!
கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், பா.ஜ.க ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர் ஆவடி போலிஸார்!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் கோவிலை புனரமைப்பதாக கூறி பா.ஜ.க ஆதரவாளரும்,, இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் இணையதளம் வழியாக ரூ. 34 லட்சம் வசூலித்து மோசடிசெய்துள்ளார் என புகார் கூறப்பட்டது.
அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புரனமைப்பதாக கூறி மக்களிடம் ரூ. 34 லட்சத்திற்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்