Breaking News

குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வுக்கு புதிய சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0

TNPSC Group 4  விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?



TNPSC குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குரூப்4 தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 

தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். குரூப் 4 தேர்வின் வினாத்தாள் 2 பகுதிகளாக இருக்கும். முதல் பகுதியில் தமிழ் மொழி தகுதித் தேர்வு இதில் 100 வினாக்கள் இடம்பெறும். அடுத்த பகுதி பொது அறிவு பகுதி ஆகும்.

முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை எடுக்க வேண்டும்.

முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியில் இருந்து கேட்கப்படும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீடு செய்யப்படாது. எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து வைத்துக்கொள்வது அவசியம். 

மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அதில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் உள்ளிட்ட தலைப்பில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

 

சிலபஸ் டவுன்லோடு செய்ய:-

https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf


https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/Model_Question_Paper_Group_IV.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback