Breaking News

அடுத்த 4 மாதங்கள்சூரியனையே பாக்க முடியாது..! – அண்டார்டிகா நீண்ட இரவுக்கு சென்று விட்டதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அடுத்த 4 மாதங்கள்சூரியனையே பாக்க முடியாது..! – அண்டார்டிகா நீண்ட இரவுக்கு சென்று விட்டதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

 


பூமியின் தென் துருவ பகுதியான அண்டார்டிகா லாங் நைட் எனப்படும் நீண்ட இரவுக்குள் சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் துருவ பகுதியில் அமைந்துள்ளது அண்டார்டிகா கண்டம். மிகப்பெரும் கண்டமான இது உலகின் மிகப்பெரிய பனி பாலைவனமாகவும் இருந்து வருகிறது. 

இங்கு மனிதர்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளது.அண்டார்டிகாவில் கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே உள்ளன, ஏனெனில் அது அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில் கோடையில் ஆறு மாதங்கள் பகலும், குளிர்காலத்தில் ஆறு மாதங்கள் இருளும் இருக்கும். அதனால் ஆராய்ச்சிக்காக சில ஆய்வாளர்கள் மட்டுமே அண்டார்டிகா சென்று தங்குகின்றனர்.

தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள். தற்போது அண்டார்டிகாவில் நீண்ட இரவு தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Long Night என்றால் என்ன:-

பூமிப் பந்து ஒரு பக்கமாக, அதாவது 23.45 டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியின் ஒரு பகுதியில் அதிக சூரிய ஒளி படும். மறுபுறம் குறைவாகப்படும். சூரிய ஒளி படுவதைப் பொறுத்து பகலும், இரவும் நீண்டும், குறுகியும் அமைகின்றன. 

உலகில் அனைத்து நாடுகளிலும் 4 வகையான பருவ காலம் இருக்கும். ஆனால், அண்டார்டிகா அடர்ந்த பனியால் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே இருக்கும்

கோடையில், அண்டார்டிகா பூமியின் பக்கத்தில் சூரியனை நோக்கி சாய்ந்து நிலையான சூரிய ஒளியில் இருக்கும். குளிர்காலத்தில், அண்டார்டிகா பூமியின் பக்கத்தில் சூரியனில் இருந்து சாய்ந்து, கண்டம் இருண்டதாக இருக்கும்.

அண்டார்டிகா பகுதி தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும்.  

அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரியனே இருக்காது. இதன் காரணமாக அங்கு இருண்ட நிலையே நீடிக்கும்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback