வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் 2 நாள் கனமழை வானிலை மையம்!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று 05.05.2022
நீலகிரி,கோவை,திருப்பூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு, தருமபுரி,சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும்
நாளை 06.05.2022
நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கரூர்,நாமக்கல்,திருச்சி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்