குருப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு..!காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தில் அதன் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு வரும் 21-ம் தேதி தேதி திட்டமிட்டபடி நடைபெறும்.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30 மணிவரையில் நடைபெறும். தேர்வு அறையில் 12.45 மணிவரை தேர்வர்கள் அமர்ந்திருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
ஹால் டிக்கெட் கலர் அல்லது கருப்பு வெள்ளை நகலை கொண்டு வரலாம்,
தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது அவரவர் விருப்பம்,
இந்த தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்
தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்,
செப்டம்பர் மாதத்தில் மெயின் நடைபெறவுள்ளது.
தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
வரும் காலத்தில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் மூலம் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்க படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்