அசானி புயல் காரணமாக 17 விமானங்கள் ரத்து! முழு விவரம்
சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அசானி புயல் காரணமாக சென்னை வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து விசாகப்பட்டினம்,ராஜமுந்திரி,விஜயவாடா ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்களும்,அதேபோல,ராஜமுந்திரி விசாகப்பட்டினம்,விஜயவாடா,ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல் சென்னையிலிருந்து மும்பை,ஜெய்ப்பூர்,கொல்கத்தா, பெங்களூா்,ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்க்கு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் இருந்து அந்தமானிற்கு இன்று காலை 8.15 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும், இன்று காலை 8.30 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 1 மணிக்கும் காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: இந்திய செய்திகள்