Breaking News

அசானி புயல் காரணாமக இன்று 12 மாவட்டங்களில் கன மழை - சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெறும் என்றும்,பின்னர் ஆந்திரா -ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வருகிற 10ஆம் தேதி ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி,புதுக்கோட்டை,திருச்சி,அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,கடலூர், கோவை,திருப்பூர், திண்டுக்கல்,தேனி,காரைக்கால்,புதுவை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback