Breaking News

பள்ளிவாசல் கட்ட ₹1.2 கோடி மதிப்பிலான நிலத்தை வழங்கிய இந்து சகோதரிகள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

உத்தராகண்டில் மசூதிக்காக ₹1.2 கோடி மதிப்பிலான நிலத்தை வழங்கிய இந்து சகோதரிகள்


 

உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காஷிபூர் நகரில் உள்ள அறுபத்திரண்டு வயதான அனிதா மற்றும் 57 வயதான அவரது சகோதரி சரோஜ் ஆகியோர் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் இதயங்களை வென்றுள்ளனர் . 

ஆம் அந்த சகோதரிகளின் தந்தை பிரஜ்நத்தன் கடந்த 2003-ம் ஆண்டில் இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது தனது விவசாய நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஈக்தாவை விரிவாக்கம் செய்ய நன்கொடையாக நழங்க விரும்புவதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தங்களது தந்தையின் கடைசி ஆசை குறித்து மகள்கள் இருவருக்கும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தங்கள் தந்தையின் இறுதி விருப்பத்தை ரமலான் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஈத்கா பள்ளிக்கு 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்கள்

 ஏற்கனவே அங்கு இருக்கும் பள்ளிவாசல் இடபற்றாகுறைகாரணமாக அங்கு புதிய பள்ளிவாசல கட்ட பள்ளி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

 

SOURCE:-

https://www.amarujala.com/dehradun/eid-2022-inspirational-story-two-hindu-sisters-gave-eid-gift-to-muslim-brothers-donated-land-to-idgah?pageId=1

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback