Breaking News

ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757 கோடி சொத்துக்கள் முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி..!!

அட்மின் மீடியா
0

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம் செய்யபட்டுள்ளது. அதன்படி, ரூ.411.83 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா செதுக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.345.94 கோடி ரொக்கத்தையும் முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. 

அந்நிறுவனம் எம்.எல்.எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்வே நிறுவனம் தனது நிறுவன பெயரில் விற்பனை செய்யும் பொருள்களின் விலைகள், அதே வகையில் சந்தையில் விற்பனை இருக்கும் பொருட்களின் விலைகளோடு ஒப்பிட்டால், மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback