Breaking News

FACT CHECK ராம்ராஜ் காட்டன் இலவச பரிசு என பரவும் லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள்.....உங்கள் தகவல்கள் திருடு போகலாம்....முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  'ராம்ராஜ் காட்டன்' இலவச பரிசு வழங்குவதாக ஒரு போலியான லிங்க் ஒன்று வாட்சாப்பில்  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 38 ஆண்டுகளாக நன்மதிப்புடன் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான எங்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், சில விஷமிகள் கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்-அப் செயலியில், ‘ஸ்பெசல் ஆபர் என வதந்திகளை பரப்பி ஒரு லிங்க்கை வெளியிட்டு, அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த லிங்க்கை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம்.

வாட்ஸ்-அப்பில் பரவும் செய்திக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்ததொடர்பும் இல்லை. 

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் இத்தகைய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 

காலத்துக்கு ஏற்றவாறு மோசடி நபர்களும் புதிய புதிய முறையில் பயன்படுத்தி பணம் பறித்து வருகின்றனர். ஏதாவது ஒரு பிரபல கம்பெனிகளின் பெயரைப் பயன்படுத்தி, லிங்க் கிரியேட் செய்து அதனை வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு ஹேக்கர்கள் அனுப்புகிறார்கள். அதன் மூலம், 'உங்களுக்குப் பரிசு காத்திருக்கிறது, மொபைல் போன் வெல்லுங்கள்” என்றெல்லாம் ஆசையைக் காட்டி, இந்த லிங்க்கை 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள், அல்லது 5 குரூப்புக்கு ஷேர் செய்யுங்கள் என்ற மெசேஜ்களை பரப்புகிறார்கள்.

அந்த லின்ங்கை கிளிக் செய்வதன் மூலம்  ஹேக்கர்கள் வாட்ஸ் அப்பிலிருந்து மொபைல் டேட்டா மூலம் நமது தகவலை எடுத்துக்கொண்டு அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கலாம்

இலவசமாகப் பணம் வ்ருது, பரிசு கிடைக்கிறது என இந்த லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். ஏனென்றால் இப்படி வரும் லிங்க்குகள் எல்லாம் போலியானவை.  பரிசுகள் எல்லாம் கிடைக்காது. மாறாக லிங்க்குகளை கிளிக் செய்யும் போது மொபைல் டேட்டாவை பயன்படுத்தி , வாட்ஸ் அப் பயனாளிகளின் மொபைலில் உள்ள போட்டோஸ், வீடியோஸ், தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் ஹேக்கர்கள் டவுன்லோடு செய்து கொள்வார்கள். அப்படித் திருடப்படும் தகவல்களில் முக்கியமான போட்டோ, வீடியோ எதாவது கிடைக்கிறதா என பார்த்து அதை எடுத்துக்கொண்டு மிரட்டுவார்கள். இல்லை என்றால் குடும்ப பெண்களின் புகைப்படங்களைத் தவறாக மார்பிங் செய்து பணம் பறிக்க மிரட்டுவார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback