Breaking News

FACT CHECK ஏழை பெண்களின் திருமணத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி லாட்லி அறக்கட்டளை பெயரில் பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முக்கிய அறிவிப்பு. ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். லாட்லி அறக்கட்டளை 9871727415, 9873182468, 9717231663. இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள தொலைபேசி எண்கள் வேலை செய்யவில்லை

ஆனால் அதே சமயம் அந்த எண்கள் யாருடையது என நாம் தேடியவரையில் அந்த எண்கள் லாட்லி அறக்கட்டளையுடையது தான் என தெரியவந்தது


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள தகவல் போல் லாட்லி அறக்கட்டளை என்ற பெயரில் டெல்லியில் ஒரு NGO செயல்பட்டுவருகின்றது

அந்த லாட்லி அறக்கட்டளை கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி டெல்லியில் உள்ள  சத்தார்பூர் கோவில் மைதானத்தில் ஏழைப் பெண்கள் 51 பேருக்கு திருமணம் செய்து வைத்தது. இதில் இந்து, முஸ்லீம்  என அனைத்து சமூக பெண்களும் இடம் பெற்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் பரிசாக வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 


ஆனால் அந்த வருடம் முடிந்தும் பலர் அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு திருமண உதவி கேட்டு கொண்டு இருந்ததால் அவர்களால் பதில் சொல்ல முடியாமல் அந்த எண்ணை உபயோகத்தில் இருந்து எடுத்து விட்டார்கள்

மேலும் லாட்லி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் இலவச திருமண நிகழ்வுகளில் மட்டுமே இது போன்ற உதவிகளைச் செய்கிறது. 

தனிப்பட்ட நபர்களின் திருமணத்திற்க்காக  யாருக்கும் உதவுவது இல்லை. 

இது போன்ற கூட்டுத் திருமணம் எப்போது நடைபெறும் என்று எங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிடுகிறோம். 

என கடந்த 23.04.2017 ம் ஆண்டே check4spam என்ற இனையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


 https://check4spam.com/ladli-foundation-gives-shagun-bear-wedding-expenses-spam/


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback