வாட்ஸப்பில் வர இருக்கும் அடுத்த அப்டேட்கள் என்ன என்ன??? முழு விவரம்..
வாட்ஸப்பில் மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் யாருக்கும் மெசஜ் அனுப்ப வேண்டுமோ அவரது மொபைல் எண்ணை போனில் பதிவு செய்ய வேண்டும்.அதன்பின்புதான் அவருக்கு நாம் மெசஜ் அனுப்ப முடியும், தற்போது நம்பரை சேமிக்காமலேயே டைரக்ட் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்த இருக்கிறது.
தற்போது போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியான ஃபைல்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்கிறது
ஹார்ட், சிரிப்பு, கோபம் போன்ற ரியாக்சனை மெசேஜ்களுக்கு வெளிப்படுத்த, ஃபேஸ்புக் மெசேன்ஜர், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி வசதி அறிமுகமாகிறது.
வாட்ஸப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி அறிமுகமாகிறது. அதாவது ஒரு குழுவில் ஏதேனும் ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே டெலீட் செய்யும் வசதி விரைவில் வரவிருக்கிறது.
வாட்ஸப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
பல வாட்ஸப் குரூப்களை ஒன்றாக கையாளும் வசதியும் (Communities) அறிமுகமாக உள்ளது.
தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஒரே செய்தியை பார்வேர்ட் செய்யும் குழுக்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து ஒன்றாகக் குறைக்கவும் இருக்கிறது
இந்த புதிய அப்டேட்கள் அனைத்தும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தொழில்நுட்பம்