Breaking News

வாகன சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ - சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ ஒன்று காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது


சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அதிவேகமாக ஆட்டோவில் அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு  வந்துள்ளது.இதனை தூரத்தில் இருந்து கவனித்த பொன்ராஜ் அவர்கள் அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார்.

காவலர் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டியும் வேகத்தை குறைக்காமல் அதிவேகத்தில் வந்த ஆட்டோ, காவலர் பொன்ராஜ் மீது மோதி தூக்கி வீசிவிட்டு சென்றது.

இதையடுத்து, அருகில் இருந்த காவலர்கள் பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தியு ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்,

இந்நிலையில் அந்த விபத்து குறித்த சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆட்டோ காவலர் மீது மோதிய விடியோ காட்சி பதிவாகியுள்ளது அந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது


வீடியோ பார்க்க”-

https://twitter.com/Autokabeer/status/1511288083597393923

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback