Breaking News

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து- முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 



உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும், அருகேயுள்ள வார்டுகளில் இருக்கும் நோயாளிகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன
 

விசாரணையில் தீப்பற்றி எரிந்த குடோன் ஆக்சிஜன் சிலிண்டர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வைக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியினை பார்வையிட்டுவருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback