கூகுள் மேப்பில் டோல் கட்டணம் எவ்வளவு என்றும் டோல்கேட் வழியும் தெரிந்து கொள்ளலாம்....முழு விவரம்
தற்போது நாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் கூகுள் மேப்ஸில் சென்று எவ்ளோ கிலோமீட்டர் எந்தெந்த வழியாக போகலாம் எல்லாம் தெரிஞ்சுப்போம் தெரிந்து கொள்வோம்
கூகுள் மேப்ஸ்ஸில் இனி வரும் நாட்களில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் தூரம் எவ்வளவு என்பதை மட்டுமல்லாது சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடி கட்டணம் எவ்வளவு என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் பயணத்தையும் தெளிவாக திட்டமிடலாம்.
உதாரணமாக நாம் சென்னையில் இருந்து கர்நாடகா செல்கொன்றோம் என்றால் அந்த வழியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் எவ்வளவு என்பதை பயனர்கள் இந்த அம்சத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் நாம் சுங்கச்சாவடிகள் இல்லாத சாலையையும் அதில் தேர்வு செய்யும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் இந்த அம்சம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் பல நாடுகளில் வெளியிடப்படும் என்று நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்