ரயில் தண்டவாளங்களில் செல்ஃபி எடுத்தா 2000 ரூபாய் அபராதம்! ரயில்வேதுறை எச்சரிக்கை
ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால், 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துறை எச்சரித்துள்ளது.
ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் முடிவு செய்துள்ளது.
ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் 2,000 அபராதம் விதிக்கப்படும்.
சென்னை புறநகர் மின்சார ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி கடப்பவர்கள், செல்ஃபி எடுப்பவர்கள், வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ரயில்பயணிகள் மத்தியில் தொடர்விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.எனவே, பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதையும், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்